NEWS

BJR Christian Media

நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். கலாத்தியர் 6 9.

Thanks to Jeevitha Mary.

நீங்கள் இன்று செய்யும் நண்மையான காரியங்கள் நாளை மறக்கப்படலாம். எனினும் நன்மையையே செய்யுங்கள்.

தேவன் உங்களை வெற்றியாளாராக பார்க்கவில்லை. நீங்கள் அவருக்கு விசுவாசமாக வாழ்கின்றீர்களா என்றே பார்கின்றார்.

மக்கள் அடிக்கடி அறிவுக்கு எற்புடையதல்லாமல் சுயத்தையே மைய்யமாக வைத்துக்கொள்கின்றனர். அவர்களை எவ்வகையிலும் மன்னியுங்கள். அவர்களுக்கு நன்மையையே செய்யுங்கள்.

அன்பான வார்த்தைகள் விரைவில் மறைந்து போனாலும், அதன் எதிரொலி என்றும் கேட்குமென்பதை மறந்து விடாதீர்கள்.

நீங்கள் அன்பு செலுத்துகின்றவர்களாக இருந்தால், ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக அன்பு காட்டுகிறார்கள் என்று உங்களைக் குற்றப்படுத்தலாம். எனினும் அன்புடனேயே இருங்கள். அவர்களுக்கு நன்மையையே செய்யுங்கள்.


நீங்கள் பிறரை குற்றப்படுத்தினால், அவர்களிடம் அன்பு காட்டுவதற்கு உங்களுக்கு நேரம் இருக்காது.

நீங்கள் நேர்மையாளராக இருந்தால் மக்கள் எளிதில் உங்களை ஏமாற்றிவிடலாம். ஆனாலும் நேர்மையாளராகவே இருங்கள். ஏமாற்றியவர்களுக்கும் நன்மையையே செய்யுங்கள்.

நம்மால் மிகப்பெரிய காரியங்கள் செய்து சாதிக்க முடியவில்லை என்றாலும், தேவனுக்காக சிறிய செயல்களையும் அன்புடன் செய்யுங்கள்.

நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியிடனிருந்தால் மக்கள் பொறாமைப்படலாம். எனினும் நீங்கள் மகிழ்ச்சியோடேயே இருங்கள்.

வெறுப்பது யாராக இருந்தாலும், நேசிப்பது நீங்களாகவே இருங்கள். 

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால், காண முடியாத இறைவனிடம் எவ்வாறு அன்பு செலுத்த முடியும்.

நீங்கள் உங்களிலுள்ள மேன்மையானதை உலகத்திற்கு கொடுங்கள். ஆனாலும் ஒரு சிலருக்கு அது போதுமானதாக இருக்காது. ஆனாலும் தொடர்ந்து மேன்மையானதைக் கொடுத்துகொண்டே இருங்கள்.

இது உங்களுக்கும் அவர்களுக்குமுள்ள காரியமல்ல. இது தேவனுக்கும் உங்களுக்குமுள்ள காரியம் என்பதை முடிவிலே அறிந்துகொள்வீர்கள். – அன்னை தெரேசா

Thanks to Sister Jeevitha Mary

NEWS

NCC JEBA SINGH

அனுப்புநர்:

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு

பெறுநர்

மாண்புமிகு. வனத்துறை அமைச்சர் அவர்கள்
தலைமை செயலகம்
சென்னை .

பொருள் :

காணி செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான காணி மக்களுக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல உடனடி அனுமதி வேண்டி .

வணக்கம் ஐயா –

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான காணி பழங்குடி மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர் .

பேச்சிப்பாறை, கோதையாறு, கீரிப்பாறை உள்ளிட்ட வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் இந்த மக்கள் தற்போது புதிய வீடுகள் கட்ட, பழுதடைந்த குடியிருப்புகளை சரி செய்ய, கழிப்பிடம் கட்ட போன்ற பணிகளுக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லும் போது வனத்துறையினர் சோதனைக் சாவடியிலேயே அனுமதி மறுத்து வருகின்றனர்.

மேலும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்

. மலைவாழ் மக்கள் வனங்களில் வாழ்வதற்குரிய பல்வேறு உரிமைகள் அளித்திருந்தாலும் மாவட்ட வன அதிகாரி, மற்றும் வனத்துறையினர் உரிமைகளை மறுத்து வருகின்றனர். இதனால் மலைவாழ் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர் .

மேலும் புதிதாக வீடு கட்டுமானம் செய்யும் போது பட்டா உள்ளிட்ட ஆவண நகல்களை வனத்துறையினரிடம் கொண்டு சென்று ஒவ்வொரு லோடுக்கும் அனுமதி கேட்க வேண்டிய நிலை உள்ளது. இதில் பல நேரங்களில் அனுமதி கிடைக்காமல் மலைவாழ் மக்கள் அலை கழிக்கப்படுகின்றனர்

இதனால் பழுதடைந்த குடியிருப்புகளை சரி செய்ய புதிய விடுகள் கட்ட , கழிப்பிடம் கட்ட மலைப் பகுதிகளில் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதியை உடனே வழங்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நேஷனல் கிறிஸ்டியன் , சார்பாக தங்கள் சமூகம் பணிந்து கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு

NCC JEBA SINGH
NEWS

National Christian Council

அனுப்புநர்:

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு

பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் .
தலைமை செயலகம்.
சென்னை .

பொருள் :

விநாயகர் சதுர்த்தி அன்று சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதுதொடர்பாக .

கரோனா நோய் தடுப்பு கால கட்டத்தில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டிற்குள்ளேயே கொண்ட வேண்டும் எனவும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது, ஊர்வலம் செல்வது ஆகியவை தடை செய்யபடுகிறது என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது .

இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களால் வரவேற்கப்பட்டது.

மாநில அரசு மக்கள் நலனில் நல்ல சிந்தனையோடும் ந்ல்ல நோக்கத்தோடும் கொண்டு வந்துள்ள இந்த உத்தரவை மீறப் போவதாகவும், தமிழகத்தில் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து விழா கொண்டாட போவதாகவும் இந்து முன்னணி மாநில தலைவர் தெரிவித்துள்ளார் .

இவ்வாறு தமிழகத்தில் நடந்தால் தமிழக அரசின் தடை உத்தரவை மீறி இந்து முன்ணணி விழா நடத்த போவதாக அறிவித்துள்ள நிலையை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் .

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி பிரச்சனை ஏற்படுத்தும் அமைப்புகள் மீது தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

இப்படிக்கு

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு

National Christian Council
NEWS

NCC JEBASINGH

நெல்லையில் இன்று பரபரப்பு. கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகி , கிறிஸ்தவ போதகர்களை ஊருக்குள் விட RSS பிரமுகர்கள் தடை

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா நடு பிள்ளையார்குளம் பகுதியில் உள்ள மூணாறு நிலச்சரிவில் உயிர்ழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்க இன்று (13.8.20) காலை 8 மணியளவில் திருநெல்வேலியிருந்து நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் , தென்னிந்திய திருச்சபை தொடர்பு துறை இயக்குநர் Rev.கிப்ஸன் ஜான் தாஸ், மற்றும் சிமிர்னா A G சபை போதகர் ஜோயல் ஆகியோர் வாகனத்தில் நடு பிள்ளையார்குளம் சென்றனர்

கிராமத்தில் முன் பகுதியில் RSS பிரமுகர்கள் காரை வழிமறித்து தாங்கள் எங்கள் ஊரில் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த உறவினர்கள யாரையும் சந்தித்து ஆறுதல் கூற அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து நீங்கள் திரும்பி செல்லுங்கள் என தெரிவித்தனர் .

NCC ஜெபசிங் . Rev. கிப்ஸன் ஜான் தாஸ் மற்றும் Rev.ஜோயல் ஆகியோர் நடு பிள்ளையார்குளம் ஊருக்குள் செல்ல முடியாமல் பிள்ளையார்குளத்தில் உள்ள CSi தேவாலயத்தில் பிராத்தனை செய்து விட்டு திரும்பினர்

. இந்த சம்பவத்திற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள், கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடதக்கது .

NEWS

NCC Jebasingh

அனுப்புநர்

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு.
Ph.814406 9997

பெறுநர்.

மாண்புமிகு தலைவர் அவர்கள்
மாநில சிறுபான்மை ஆணையம்
சென்னை.

பொருள்:

மதுரை புறநகர் மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியம் ஸ்ரீசதுரகிரி மகாலிங்கம் மலை அடிவாரத்தில் உள்ள ஜெப வீட்டை அகற்ற கோரிய புகார் மனு தள்ளுபடி செய்வது சம்பந்தமாக.

வணக்கம் ஐயா.

ஸ்ரீ சதுரகிரி மகாலிங்கம் மலை அடிவாரத்தில் அணைக்கரப்பட்டி திரு.பிரபாகரகன் த/பெ.தங்க அழகு கடந்த 25 வருடங்களாக லீபனோன் ஜெபவீடு நடத்தி வருகிறார். அங்குள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து அனைத்து மத விழாக்களிலும் சகோதர/சகோதிரிகளாக பாவித்து விழாக்களை மத நல்லிணக்கத்தோடு கொண்டாடி வருகின்றனர்.

ஸ்ரீசதுரகிரி மகாலிங்கம் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் விழாக்கலுக்கு வரும் பக்தர்கள் அருகில் உள்ள ஜெப வீட்டில் தங்கி தான் கோயிலுக்கு சென்று வருவர்.

இப்படி ஒற்றுமையாக உள்ள கிராமத்தில் மத கலவரத்தை தூண்டும் விதமாக இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் M. சோலைக் கண்ணன் என்பவர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜெபவீடு அகற்ற கோரி புகார் மனு அளித்துள்ளார்.மேற்படி மனு சம்பந்தமாக 8.8.20. அன்று சாப்டூர் காவல் நிலையத்தில் ஜெப வீட்டின் உரிமையாளர் திரு.பிரபாகரன் அவர்கள் ஆஜராகி ஜெபவீடு என்னுடைய சொந்த பட்டா இடத்தில் கட்டி உள்ளதாகவும். சதுரகிரி மகாலிங்கம் திருக்கோயிலுக்கு ஆண்டுதோறும் வரும் பக்தர்கள் என்னுடைய ஜெப வீட்டில் தங்கி திருவிழாவை காண்பதற்கு வருடா வருடம் அனைத்து உதவிகளையும் செய்து வந்து கொண்டு இருக்கிறேன் என்றும் மேலும் என்னுடைய அனுபவத்தில் இருந்த காலி நிலத்தை சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் திருக்கோயிலுக்கு தானமாக அளித்துள்ளேன் என்றும் அருகில் உள்ள அனைத்து கிராம மக்களும் இணைந்து சாதி மதம் பார்க்காது அனைத்து இன்ப | துன்ப நிகழ்வுகளில் ஒற்றுமையுடன் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறோம் என்பது மதுரை மாவட்ட மக்களுக்கு தெரியும் என்றும் தனது வாக்குமூலத்தை சாப்டூர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜெய பிரியா அவர்களிடம் . தெரிவித்து உள்ளனர்.

மேலும் ஜெபவீடால் எந்த ஒரு இடையூறும் இல்லை என்றும் அனைத்து மக்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் கிராம மக்கள் மத நல்லிணக்கத்துடன் செயல்படுகிறோம் என வண்டப்புலி ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஜெயராமன், 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் திரு.அழகுத் தாய் முனியாண்டி, வண்டாரி ஊராட்சி மன்ற தலைவர் திரு.நம்பியார், வண்டாரி முஸ்லிம் ஜமாத் தலைவர் முத்தவல்லி அப்துல் ஆகியோர் எழுத்து பூர்வமாக கடிதம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் எந்த ஒரு மதக்கலவரம் ஏற்படாமல் நல்லாட்சி நடத்தி வரும் அரசிற்கு சிறுபான்மை மக்களிடையே கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும், மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பொய் புகார் அளித்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் கிராம மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட பொய் புகாரை ரத்து செய்து பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமலும் அனைத்து மத மக்களும் ஜெபவீட்டை தொடர்ந்து பயன்படுத்தவும் தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து உரிய ஆவண செய்யும்படி தங்கள் சமூகம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு

ஆண்டவரின் பணியில்

NCC ஜெபசிங்

Jeba Singh / National Christian Council
NEWS

NCC Jeba Singh

அனுப்புநர்:

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு.
Ph.8144069997

பெறுநர் .

மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள்
தலைமை செயலகம்.
சென்னை .

பொருள் :

மாணவர்களுக்கு கூடுதலாக இணைய சேவை மையம் மற்றும் அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக

வணக்கம் ஐயா.

தமிழகத்தில் மாணவ/மாணவர்கள் கரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகளில் நேரடியாக விண்ணப்பிக்க இயலாமல் விண்ணப்பங்கள் இணையவழியே கடந்த ஜுலை மாதம் 20 முதல் 31 வரை விண்ணப்பம் பெறப்பட்டது .

இணையவழியே தமிழக முழுவதும் மாணவ / மாணவிகள் விண்ணப்பிப்பது இதுதான் முதல் முறை. சாதாரண ஏழை ,எளிய கிராமப்புற மாணவர்கள் மலைவாழ் கிராமங்களில் உள்ள மாணவர்கள் போன்றவர்கள் விண்ணப்பிப்பதில் மிகவும் சிரமம் உள்ளது.

மேலும் இணைய சேவை மையங்களை அதிக இடங்களில் அமைத்து மாணவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தில் கடந்தாண்டு விண்ணப்பித்த மாணவர்களை விட இந்தாண்டு மிக குறைவாகவே விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. மாணவ / மாணவிகளுக்கு இணைய வழி விண்ணப்பிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால் பல மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் போனது .

12 ம் வகுப்பில் ஒரு தேர்வு மட்டும் எழுதாமல் இருந்த 34 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி தற்போது முடிவுகள் வந்துள்ளன . அந்த மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் .

எனவே தமிழக அரசு மாணவ/மாணவிகளின் நலன் கருதி இம்மாதம் இறுதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்க கால அவகாசத்தை தாங்கள் வழங்கிடவும், அரசு சார்பில் இணைய சேவை மையங்களை அதிகமாக அமைத்து மாணவ | மாணவிகளுக்கு உதவிடவும் மேற்கண்ட கோரிக்கை நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் .

இப்படிக்கு
NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு

National Christian Council
NEWS

NCC Jeba Singh

அனுப்புநர்.

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிைணப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு. Ph.8144069997 .

பெறுநர்

மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள்
தலைமை செயலகம்
தமிழ்நாடு .

பொருள் :

தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை உடனடியாக திறப்பது மற்றும் திருச்சபை ஊழியர்களுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து..

வணக்கம் ஐயா,

கரோனா ஊரடங்கு காலத்தில் தேவாலயங்கள் அனைத்தும் மத்திய அரசால் மூடப்பட்டன

தற்போது கடந்த மாதங்களில் இருந்து கிராம புறங்களில் உள்ள தேவாலயங்கள் திறப்பதற்கு தாங்கள் உத்தரவு பிறப்பித்தீர்கள். அனைத்து கிறிஸ்தவ மக்கள் சார்பாக முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

தற்போது கரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருவது நாம் அனைவருக்கும் ஆறுதலாக உள்ளது.

இந்த சூழ்நிலையில் திருச்சபைபோதகர்கள் , ஊழியர்கள் மிகவும் பெரிய பாதிப்பையும் , பொருளாதார பின்னனடவையும் சந்தித்து வருகிறார்கள் .

தமிழக அரசு கூறும் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்து முகக் கவசம், சமூக இடைவெளி, ஆகியவற்றுடன் தேவலாயங்களை திறந்து ஆராதனை நடத்த தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழக அரசு கூறும் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிப்போம் என தெரிவித்துக் கொள்கிறோம் .
.

தமிழகத்தில் உள்ள பதிவு பெற்ற திருச்சபை ஊழியர்களுக்கு கரோனா கால நிவாரண நிதியாக 5000/௹பாய் வழங்க தாங்கள் ஆவண செய்யும்படியும் தமிழக கிறிஸ்தவ திருச்சபை ஊழியர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் தங்களது அரசுக்கு எங்களது வாழ்த்துக்களையும் , நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

இப்படிக்கு

ஆண்டவரின் பணியில்
NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு

NCC jeba Singh
NEWS

NCC JEBA SINGH

ஆன்லைன் கல்வித் திட்டத்தை தடை செய்ய தேசிய குழந்தைகள் நல ஆணையத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கினணப்பாளர் NCC ஜெபசிங் புகார் மனு .

ஏழை எளிய நடுத்தர குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர்களால் ஆன்ட்ராய்டு செல்போன், மற்றும் மடிக்கணினி வாங்க முடியாத சூழலில் அவர்கள் எப்படி ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும்,,?

ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளுக்கு கண், காதுகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்

, மேலும் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் இடையிடையே ஆபாச வலைதளங்கள் வந்து குழந்தைகளின் கவனத்தை சிதறடிக்கப்படுவது . மிகவும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும் .

மாற்று திறனாளி குழந்தைகளுக்கு எவ்வாறு கல்வி வழங்க பட வேண்டும் என்பது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை .

எனவே ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் நல ஆணையத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கினணப்பாளர் NCC ஜெபசிங் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்

NCC JEBA SINGH
NEWS

NCC Jebasingh

தமிழகத்தில் கல்லூரி இறுதித் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் .

கரோனா பாதிப்பு காரணமாக பள்ளி தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கலை , அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் என அனைத்து கல்லூரிகளிலும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தவிர அனைத்து தேர்வுகளும் *ரத்து *செய்யப்படுவதாக தமிழக* அரசு அறிவித்தது.

இந்நிலையில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யாமல் காலம் தாழ்த்துவதால் மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி காத்திருக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் .

வங்கியில் கல்விக் கடன் பெற்று படிக்கும் மாணவ / மாணவிகள் உரிய காலத்தில் வேலைக்கு செல்லவில்லை எனில் மிகப் பெரிய பாதிப்பை அவர்கள் சந்திக்க நேரிடும் .

கல்வித்துறை உடனடியாக மாணவர்கள் , பெற்றோர்கள் , பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்கவும், இந்த ஊரடங்கு காலத்தில் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகி விடும்.

எனவே தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

Jeba Singh

ABM TV
NEWS

NCC JEBASINGH

தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையம் துவக்கப்பட்டுள்ளது . கிறிஸ்தவ இளைருர்கள் பயன் பெற நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கினணப்பாளர் NCC ஜெபசிங் வேண்டுகோள் .

தமிழ்நாடு அரசால் தமிழ் நாட்டில் உள்ள தனியார் துறைகள் மூலம் வேலை வாய்ப்புகளை பெற்று தரும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு தனியார் வேலை இணையம் Tamilnadu Private Job Portal ( http://www.tnprivateJobs.tn.gov.in) தமிழக முதலமைச்சர் அவர்களால் ( 16.6.20 ) அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது .

தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் நமது கிறிஸ்தவ இளைஞர்கள் இவ்இணைய தளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களது கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றிக்கு ஏற்ப பணிகளை பெறுவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் துறைகளும் இவ் இணையத்தில் வேலை வாய்ப்புகளை பதிவேற்றம் செய்து பணிகளை வழங்க இவ் இணையம் வழிவகை செய்கிறது .

வேலை அளிப்போர், வேலை நாடுவோர் இவ் இணையத்தில் எவ்வித பதிவு கட்டணம் இன்றி முற்றிலும் இலவசமாக பயன் பெற தமிழக அரசால் வழங்கப்படுகிறது .

தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாடு தனியார் துறை வேலை இனணய தளம் மூலம் இணைய வழி நேர்காணல்.பணி நியமனம் ஆகிய வசதிகளை பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவ இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

மேலும் இவ் இணையதளத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் தேவை படின் அத்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரங்களை இளைஞர்கள் பெற்றுக் கொள்ளலாம்

வேலை வாய்ப்பு குறைவாக உள்ள இந்த கரோனா கால கட்டத்தில் கிறிஸ்தவ இளைஞர்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடைய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு சார்பாககேட்டுக்
கொள்கிறோம்

ஆண்டவரின் பணியில்

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்

NCC JEBA SINGH
NEWS

National Christian Council

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு (NCC)

+2 தேர்ச்சிக்குப் பின்
SC/ST/SCA BC(converted christian ) * இஸ்லாமிய / கிறிஸ்தவ சிறுபான்மை மாணவ / மாணவியருக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4ஆண்டுகள் கல்வி கட்டணம் ,தங்கும் விடுதி முற்றிலும் சலுகை கட்டணத்திலும் மத்திய / மாநில அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவி தொகை மூலம் பயில ஏற்பாடு செய்கிறோம் .

BC / MBC / BCM முதல் தலைமுறை மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிபடிப்புகான 4ஆண்டுகள் கல்வி கட்டணம் ,தங்கும் விடுதி சலுகை கட்டணத்தில் படிக்க நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு. ஏற்பாடு செய்கிறது .

Courses Offer BE

Aeronautical Engg
Agricultural Engg
Computer Science & Engg
Mechanical engineering

PG.Courses

ME Aeronautical

ME CAD / CAM

ME Computer Science & Engg

MBA Master of Business Adminitrasion

DOCTORAL DEGREE
PR0GRAMMES

Ph.D in Computer Science & Engg

Ph.D in Electronics & Communication engg.

டிப்ளமோ முடித்தவர்கள் BE படிக்கலாம் .
Any Degree முடித்தவர்கள் , சலுகை கட்டணத்தில் ME, MBA, படிக்க நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் ஏற்பாடு செய்கிறது.

அனைத்து இஸ்லாமிய / கிறிஸ்தவ சிறுபான்மை மாணவ-மாணவியருக்கும் உயர் கல்விசமந்தப்பட்ட ஆலோசனை வழங்கப்படும்.

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு.(NCC )

திரு.NCC ஜெபசிங் மாநில ஒருங்கிணைப்பாளர்

Rev.கிப்ஸன் ஜான் தாஸ்
இயக்குநர். தென்னிந்திய திருச்சபை தொடர்பு துறை – திருநெல்வேலி மாவட்டம்

Rev.பாபு பால் தினகரன்
முதன்மை இணை செயலாளர் | பெந்தேகோஸ்தே சபைகளின் மாமன்றம் _ தமிழ்நாடு .

BJR கிறிஸ்டியன் மீடியா. கன்னியாகுமரி மாவட்டம்

தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண்கள்

: 8144069997., 9842355776, 8248489864
Kindly forward to all group’s

Video

NEWS

NCC JEBA SINGH

தமிழக கிராம மக்களின் பொது குடிநீர் இணைப்பு ரத்து செய்யப்பட்டு இலவச குடிநீருக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ரத்து செய்ய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் அறிக்கை

தமிழ்நாட்டில் கிராமங்களில் தற்போது வரை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு இலவசமாக பொது குடிநீர் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது . மேலும் தனியாக குடிநீர் இணைப்பு தேவைப்படுவோர் உள்ளாட்சி நிர்வாக அனுமதியோடு குடிநீர் இணைப்பு பெற்று கொள்ளும் நடைமுறை உள்ளது .

தற்போது மத்திய அரசு ஜல் சக்தி துறை மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தர போவதாக அறிவிப்பு வந்துள்ளது .

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தரப்படும் இணைப்பிற்கு ரூபாய் 3000 பணம் செலுத்த வேண்டும் எனவும், மாதம் ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும் அதிகாரிகள் வாய்மொழியாக கூறியுள்ளனர் .

இனி வரும் காலங்களில் கிராமங்களில் பொது குடிநீர் குழாய்கள் கட்டாயம் அகற்றப்படும் எனவும் கூறப்படுகிறது. வரும் காலங்களில் ஒவ்வொரு குடிநீர் இணைப்பிலும் மீட்டர் பொருத்த எற்பாடு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எவ்வளவு நீர் பயன்படுத்துகிறோமே அவ்வளவு தொகை செலுத்த வேண்டும் . எனவும் பொது இலவச குடிநீர் இணைப்பு இனி இருக்க வாய்ப்பு இல்லை. எனவும் தெரிகிறது .

தஞ்சை மாவட்டத்தில் 10 ஊராட்சிகளில் ஜல்சக்தி பணிகள் துவக்கப்பட்டுள்ளன

இத்திட்டத்தின் மூலம் விவசாய தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்

ஆகவே பழைய நடைமுறைப்படியே கிராம உள்ளாட்சிகள் மூலம் பொது இலவச குடிநீர் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் எனவும், காசு கொடுத்து குடிநீர் வாங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

NATIONAL CHRISTIAN COUNCIL / JEBA SINGH
Tamil Christian media

National Christian Council

தமிழக முதலமைச்சருக்கு குமரி மாவட்ட கத்தோலிக்க ஆயர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மனு .

அனுப்புநர்:

சகோ.NCC  ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன்                  கவுன்சில்
தமிழ்நாடு. Ph. 8144069997

பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்.
தலைமை செயலகம்
சென்னை .

வணக்கம்

பொருள் : குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க ஆயர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டி.

கரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் 17 ந் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்டன .

இதை கண்டித்து 8ந் தேதி கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் நசரேன்சூசை . மற்றும் குளித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் உள்ளிட்டோர் பதாகைகள் ஏந்தி அமைதியான முறையில் டாஸ்மார்க் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் .

அப்போது அரசு அறிவித்த தனி மனித இடைவெளி பின்பற்றபட்டது .
சட்ட பிரிவு 144க்கு எதிராக அவர்கள் செயல்படவில்லை .

அரசுக்கு எதிராக அவர்கள் போராடவோ , அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டவோ இல்லை.

மக்களை நல்வழியில் நடத்தி செல்லக் கூடிய குமரி மாவட்ட 2 ஆயர்கள் மீது மாவட்ட காவல் துறை பொய் வழக்கு போட்டுள்ளனர்.

இந்த செயல் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களை வேதனை அடைய செய்துள்ளது.

ஆகவே தாங்கள்  கத்தோலிக்க திருச்சபையை சோந்த ஆயர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை உடனடியாக ரத்து செய்ய தாங்கள் ஆவண செய்யும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி.

இப்படிக்கு*

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கினணப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு .

தமிழக முதலமைச்சருக்கு குமரி மாவட்ட கத்தோலிக்க ஆயர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் அளித்த மனுவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

சகோ. ஜெபசிங். மாநில ஒருங்கிணைப்பாளர்
Tamil Christian media

covid-19 Helping Team In Thirunelveli

கோவிட்-19 உயிர் கொல்லி:

கோவிட்-19 உயிர் கொல்லி வைரஸானது, உலகத்தில் வாழும் அனைத்து மனித இனத்தையும் ஆட்கொண்டு அதன் கொடுமையையும் தாக்கத்தையும்  காட்டியுள்ளது . 

உதவிகள்:

கரோனா பாதிப்பால் உணவில்லாமல் வறுமையில் தவிக்கும் நம் மக்களுக்கு உதவுவதற்கு நம்மால் தான் முடியும் .

சராசரி மனிதனுக்கே இப்படி என்றால் மாற்று திறனாளிகள், ஆதரவற்ற முதியோர், மன நலம் பாதிக்கப்பட்டோர் நிலைமை என்ன?

இதுவரை முகம் பார்க்காத பல நல்ல உள்ளங்கள் தன்னார்வமாக பல உதவிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

எவ்வளவு உதவி தேவைப்பட்டாலும் எங்களால் முடிந்த வரை செய்வோம்.

உணவின் தேவைகள்:

இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து அந்தந்த பகுதியில் உள்ள நமது குழு உறுப்பினர்கள் மூலமாக அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்குகிறோம்.

தற்போது உணவின் தேவைகள் அதிகரித்து உள்ளது . எனவே அனைவரும் விலகியிருந்து ஒருங்கிணைந்து பசியை போக்குவோம் . தற்சமயம் வரை 250க்கும் மேற்பட்ட உணவு தேவைப்படுவோர் கோரிக்கை வந்துள்ளது.

மனமுவந்து நேரடியாக தந்து உதவலாம்:

ஆனால் நாம் தற்போது உணவு கொடுப்பதோ 150 நபர்களுக்கு மட்டும் தான்.

தற்போது நமது குழுவுக்கு உடனடி தேவையாக மளிகை , *காய்கறிகள் தேவைபடுகிறது நீங்கள் மனமுவந்து நேரடியாக தந்து உதவலாம்

உதவ விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் .

தொடர்பு கொள்ளவும்:

சகோ.ஜெபசிங்
8144069997

சகோ.ஹெரால்டு
9366752525

சகோ. A1 டேனி
9944306363

கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் குழு .திருநெல்வேலி