NEWS

NCC Jebasingh

அனுப்புநர்

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு.
Ph.814406 9997

பெறுநர்.

மாண்புமிகு தலைவர் அவர்கள்
மாநில சிறுபான்மை ஆணையம்
சென்னை.

பொருள்:

மதுரை புறநகர் மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியம் ஸ்ரீசதுரகிரி மகாலிங்கம் மலை அடிவாரத்தில் உள்ள ஜெப வீட்டை அகற்ற கோரிய புகார் மனு தள்ளுபடி செய்வது சம்பந்தமாக.

வணக்கம் ஐயா.

ஸ்ரீ சதுரகிரி மகாலிங்கம் மலை அடிவாரத்தில் அணைக்கரப்பட்டி திரு.பிரபாகரகன் த/பெ.தங்க அழகு கடந்த 25 வருடங்களாக லீபனோன் ஜெபவீடு நடத்தி வருகிறார். அங்குள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து அனைத்து மத விழாக்களிலும் சகோதர/சகோதிரிகளாக பாவித்து விழாக்களை மத நல்லிணக்கத்தோடு கொண்டாடி வருகின்றனர்.

ஸ்ரீசதுரகிரி மகாலிங்கம் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் விழாக்கலுக்கு வரும் பக்தர்கள் அருகில் உள்ள ஜெப வீட்டில் தங்கி தான் கோயிலுக்கு சென்று வருவர்.

இப்படி ஒற்றுமையாக உள்ள கிராமத்தில் மத கலவரத்தை தூண்டும் விதமாக இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் M. சோலைக் கண்ணன் என்பவர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜெபவீடு அகற்ற கோரி புகார் மனு அளித்துள்ளார்.மேற்படி மனு சம்பந்தமாக 8.8.20. அன்று சாப்டூர் காவல் நிலையத்தில் ஜெப வீட்டின் உரிமையாளர் திரு.பிரபாகரன் அவர்கள் ஆஜராகி ஜெபவீடு என்னுடைய சொந்த பட்டா இடத்தில் கட்டி உள்ளதாகவும். சதுரகிரி மகாலிங்கம் திருக்கோயிலுக்கு ஆண்டுதோறும் வரும் பக்தர்கள் என்னுடைய ஜெப வீட்டில் தங்கி திருவிழாவை காண்பதற்கு வருடா வருடம் அனைத்து உதவிகளையும் செய்து வந்து கொண்டு இருக்கிறேன் என்றும் மேலும் என்னுடைய அனுபவத்தில் இருந்த காலி நிலத்தை சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் திருக்கோயிலுக்கு தானமாக அளித்துள்ளேன் என்றும் அருகில் உள்ள அனைத்து கிராம மக்களும் இணைந்து சாதி மதம் பார்க்காது அனைத்து இன்ப | துன்ப நிகழ்வுகளில் ஒற்றுமையுடன் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறோம் என்பது மதுரை மாவட்ட மக்களுக்கு தெரியும் என்றும் தனது வாக்குமூலத்தை சாப்டூர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜெய பிரியா அவர்களிடம் . தெரிவித்து உள்ளனர்.

மேலும் ஜெபவீடால் எந்த ஒரு இடையூறும் இல்லை என்றும் அனைத்து மக்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் கிராம மக்கள் மத நல்லிணக்கத்துடன் செயல்படுகிறோம் என வண்டப்புலி ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஜெயராமன், 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் திரு.அழகுத் தாய் முனியாண்டி, வண்டாரி ஊராட்சி மன்ற தலைவர் திரு.நம்பியார், வண்டாரி முஸ்லிம் ஜமாத் தலைவர் முத்தவல்லி அப்துல் ஆகியோர் எழுத்து பூர்வமாக கடிதம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் எந்த ஒரு மதக்கலவரம் ஏற்படாமல் நல்லாட்சி நடத்தி வரும் அரசிற்கு சிறுபான்மை மக்களிடையே கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும், மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பொய் புகார் அளித்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் கிராம மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட பொய் புகாரை ரத்து செய்து பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமலும் அனைத்து மத மக்களும் ஜெபவீட்டை தொடர்ந்து பயன்படுத்தவும் தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து உரிய ஆவண செய்யும்படி தங்கள் சமூகம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு

ஆண்டவரின் பணியில்

NCC ஜெபசிங்

Jeba Singh / National Christian Council

1 thought on “NCC Jebasingh”

Leave a comment