NEWS

நீட் தேர்வு: தருமபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை

ஆதித்யா

நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் மற்றும் சித்ரா தம்பதியினரின் மகனான 20 வயதுடைய ஆதித்யா, நீட் தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற இருக்கும் நேரத்தில், இந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே இதே காரணத்தால் மதுரையை சேர்ந்த ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகிவந்த மாணவர் ஒருவர் கிணற்றில் குதித்துத் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்தது.

ஜோதி ஸ்ரீதுர்கா மரணம்

மருத்துவ படிப்பிற்கான கட்டாய நுழைவு தேர்வான நீட் தேர்வில் மருத்துவ சீட் கிடைக்காவிட்டால் குடும்பத்தார் ஏமாற்றம் அடைவார்கள் என்ற அச்சத்தால் மதுரையைச் சேர்ந்த ஜோதி துர்கா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஜோதி துர்கா

அந்த மாணவி சாகும் முன் தனது பெற்றோருக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதியதாக கூறப்படுகிறது.

அந்த கடிதமானது சமூக ஊடகங்களிலும் அதிகமாக பகிரப்பட்டது.

அதில், தன் மீது தனது குடும்பம் அதிக நம்பிக்கை வைத்திருந்ததாகவும், தனக்கு கல்லூரி சீட் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும் என்பதால் தற்கொலை முடிவை எடுத்ததாக அந்த மாணவி எழுதியிருந்தார்.

இறுதியில் “I am sorry. Am tired” என்று கூறி முடித்து இருந்தார்.

அந்த அதிர்ச்சியில் இருந்தே பலர் மீளாத நிலையில், தற்போது ஆதித்யாவின் மரணம் பலருக்கும் துயர செய்தியாக வந்திருக்கிறது

மாணவி பேசிய கடைசி வீடியோ
ஏற்கனவே நீட் தேர்வால் உயிரை மாய்த்த மாணவர்கள்
NEWS

NCC JEBA SINGH

அனுப்புநர்:

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு

பெறுநர்

மாண்புமிகு. வனத்துறை அமைச்சர் அவர்கள்
தலைமை செயலகம்
சென்னை .

பொருள் :

காணி செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான காணி மக்களுக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல உடனடி அனுமதி வேண்டி .

வணக்கம் ஐயா –

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான காணி பழங்குடி மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர் .

பேச்சிப்பாறை, கோதையாறு, கீரிப்பாறை உள்ளிட்ட வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் இந்த மக்கள் தற்போது புதிய வீடுகள் கட்ட, பழுதடைந்த குடியிருப்புகளை சரி செய்ய, கழிப்பிடம் கட்ட போன்ற பணிகளுக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லும் போது வனத்துறையினர் சோதனைக் சாவடியிலேயே அனுமதி மறுத்து வருகின்றனர்.

மேலும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்

. மலைவாழ் மக்கள் வனங்களில் வாழ்வதற்குரிய பல்வேறு உரிமைகள் அளித்திருந்தாலும் மாவட்ட வன அதிகாரி, மற்றும் வனத்துறையினர் உரிமைகளை மறுத்து வருகின்றனர். இதனால் மலைவாழ் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர் .

மேலும் புதிதாக வீடு கட்டுமானம் செய்யும் போது பட்டா உள்ளிட்ட ஆவண நகல்களை வனத்துறையினரிடம் கொண்டு சென்று ஒவ்வொரு லோடுக்கும் அனுமதி கேட்க வேண்டிய நிலை உள்ளது. இதில் பல நேரங்களில் அனுமதி கிடைக்காமல் மலைவாழ் மக்கள் அலை கழிக்கப்படுகின்றனர்

இதனால் பழுதடைந்த குடியிருப்புகளை சரி செய்ய புதிய விடுகள் கட்ட , கழிப்பிடம் கட்ட மலைப் பகுதிகளில் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதியை உடனே வழங்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நேஷனல் கிறிஸ்டியன் , சார்பாக தங்கள் சமூகம் பணிந்து கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு

NCC JEBA SINGH
NEWS

National Christian Council

அனுப்புநர்:

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு

பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் .
தலைமை செயலகம்.
சென்னை .

பொருள் :

விநாயகர் சதுர்த்தி அன்று சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதுதொடர்பாக .

கரோனா நோய் தடுப்பு கால கட்டத்தில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டிற்குள்ளேயே கொண்ட வேண்டும் எனவும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது, ஊர்வலம் செல்வது ஆகியவை தடை செய்யபடுகிறது என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது .

இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களால் வரவேற்கப்பட்டது.

மாநில அரசு மக்கள் நலனில் நல்ல சிந்தனையோடும் ந்ல்ல நோக்கத்தோடும் கொண்டு வந்துள்ள இந்த உத்தரவை மீறப் போவதாகவும், தமிழகத்தில் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து விழா கொண்டாட போவதாகவும் இந்து முன்னணி மாநில தலைவர் தெரிவித்துள்ளார் .

இவ்வாறு தமிழகத்தில் நடந்தால் தமிழக அரசின் தடை உத்தரவை மீறி இந்து முன்ணணி விழா நடத்த போவதாக அறிவித்துள்ள நிலையை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் .

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி பிரச்சனை ஏற்படுத்தும் அமைப்புகள் மீது தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

இப்படிக்கு

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு

National Christian Council
NEWS

NCC JEBASINGH

நெல்லையில் இன்று பரபரப்பு. கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகி , கிறிஸ்தவ போதகர்களை ஊருக்குள் விட RSS பிரமுகர்கள் தடை

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா நடு பிள்ளையார்குளம் பகுதியில் உள்ள மூணாறு நிலச்சரிவில் உயிர்ழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்க இன்று (13.8.20) காலை 8 மணியளவில் திருநெல்வேலியிருந்து நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் , தென்னிந்திய திருச்சபை தொடர்பு துறை இயக்குநர் Rev.கிப்ஸன் ஜான் தாஸ், மற்றும் சிமிர்னா A G சபை போதகர் ஜோயல் ஆகியோர் வாகனத்தில் நடு பிள்ளையார்குளம் சென்றனர்

கிராமத்தில் முன் பகுதியில் RSS பிரமுகர்கள் காரை வழிமறித்து தாங்கள் எங்கள் ஊரில் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த உறவினர்கள யாரையும் சந்தித்து ஆறுதல் கூற அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து நீங்கள் திரும்பி செல்லுங்கள் என தெரிவித்தனர் .

NCC ஜெபசிங் . Rev. கிப்ஸன் ஜான் தாஸ் மற்றும் Rev.ஜோயல் ஆகியோர் நடு பிள்ளையார்குளம் ஊருக்குள் செல்ல முடியாமல் பிள்ளையார்குளத்தில் உள்ள CSi தேவாலயத்தில் பிராத்தனை செய்து விட்டு திரும்பினர்

. இந்த சம்பவத்திற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள், கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடதக்கது .