NEWS

NCC JEBA SINGH

அனுப்புநர்:

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு

பெறுநர்

மாண்புமிகு. வனத்துறை அமைச்சர் அவர்கள்
தலைமை செயலகம்
சென்னை .

பொருள் :

காணி செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான காணி மக்களுக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல உடனடி அனுமதி வேண்டி .

வணக்கம் ஐயா –

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான காணி பழங்குடி மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர் .

பேச்சிப்பாறை, கோதையாறு, கீரிப்பாறை உள்ளிட்ட வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் இந்த மக்கள் தற்போது புதிய வீடுகள் கட்ட, பழுதடைந்த குடியிருப்புகளை சரி செய்ய, கழிப்பிடம் கட்ட போன்ற பணிகளுக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லும் போது வனத்துறையினர் சோதனைக் சாவடியிலேயே அனுமதி மறுத்து வருகின்றனர்.

மேலும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்

. மலைவாழ் மக்கள் வனங்களில் வாழ்வதற்குரிய பல்வேறு உரிமைகள் அளித்திருந்தாலும் மாவட்ட வன அதிகாரி, மற்றும் வனத்துறையினர் உரிமைகளை மறுத்து வருகின்றனர். இதனால் மலைவாழ் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர் .

மேலும் புதிதாக வீடு கட்டுமானம் செய்யும் போது பட்டா உள்ளிட்ட ஆவண நகல்களை வனத்துறையினரிடம் கொண்டு சென்று ஒவ்வொரு லோடுக்கும் அனுமதி கேட்க வேண்டிய நிலை உள்ளது. இதில் பல நேரங்களில் அனுமதி கிடைக்காமல் மலைவாழ் மக்கள் அலை கழிக்கப்படுகின்றனர்

இதனால் பழுதடைந்த குடியிருப்புகளை சரி செய்ய புதிய விடுகள் கட்ட , கழிப்பிடம் கட்ட மலைப் பகுதிகளில் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதியை உடனே வழங்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நேஷனல் கிறிஸ்டியன் , சார்பாக தங்கள் சமூகம் பணிந்து கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு

NCC JEBA SINGH

Leave a comment