NEWS

NCC JEBA SINGH

தமிழக கிராம மக்களின் பொது குடிநீர் இணைப்பு ரத்து செய்யப்பட்டு இலவச குடிநீருக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ரத்து செய்ய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் அறிக்கை

தமிழ்நாட்டில் கிராமங்களில் தற்போது வரை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு இலவசமாக பொது குடிநீர் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது . மேலும் தனியாக குடிநீர் இணைப்பு தேவைப்படுவோர் உள்ளாட்சி நிர்வாக அனுமதியோடு குடிநீர் இணைப்பு பெற்று கொள்ளும் நடைமுறை உள்ளது .

தற்போது மத்திய அரசு ஜல் சக்தி துறை மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தர போவதாக அறிவிப்பு வந்துள்ளது .

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தரப்படும் இணைப்பிற்கு ரூபாய் 3000 பணம் செலுத்த வேண்டும் எனவும், மாதம் ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும் அதிகாரிகள் வாய்மொழியாக கூறியுள்ளனர் .

இனி வரும் காலங்களில் கிராமங்களில் பொது குடிநீர் குழாய்கள் கட்டாயம் அகற்றப்படும் எனவும் கூறப்படுகிறது. வரும் காலங்களில் ஒவ்வொரு குடிநீர் இணைப்பிலும் மீட்டர் பொருத்த எற்பாடு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எவ்வளவு நீர் பயன்படுத்துகிறோமே அவ்வளவு தொகை செலுத்த வேண்டும் . எனவும் பொது இலவச குடிநீர் இணைப்பு இனி இருக்க வாய்ப்பு இல்லை. எனவும் தெரிகிறது .

தஞ்சை மாவட்டத்தில் 10 ஊராட்சிகளில் ஜல்சக்தி பணிகள் துவக்கப்பட்டுள்ளன

இத்திட்டத்தின் மூலம் விவசாய தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்

ஆகவே பழைய நடைமுறைப்படியே கிராம உள்ளாட்சிகள் மூலம் பொது இலவச குடிநீர் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் எனவும், காசு கொடுத்து குடிநீர் வாங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

NATIONAL CHRISTIAN COUNCIL / JEBA SINGH

Leave a comment