NEWS

National Christian Council

அனுப்புநர்:

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு

பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் .
தலைமை செயலகம்.
சென்னை .

பொருள் :

விநாயகர் சதுர்த்தி அன்று சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதுதொடர்பாக .

கரோனா நோய் தடுப்பு கால கட்டத்தில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டிற்குள்ளேயே கொண்ட வேண்டும் எனவும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது, ஊர்வலம் செல்வது ஆகியவை தடை செய்யபடுகிறது என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது .

இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களால் வரவேற்கப்பட்டது.

மாநில அரசு மக்கள் நலனில் நல்ல சிந்தனையோடும் ந்ல்ல நோக்கத்தோடும் கொண்டு வந்துள்ள இந்த உத்தரவை மீறப் போவதாகவும், தமிழகத்தில் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து விழா கொண்டாட போவதாகவும் இந்து முன்னணி மாநில தலைவர் தெரிவித்துள்ளார் .

இவ்வாறு தமிழகத்தில் நடந்தால் தமிழக அரசின் தடை உத்தரவை மீறி இந்து முன்ணணி விழா நடத்த போவதாக அறிவித்துள்ள நிலையை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் .

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி பிரச்சனை ஏற்படுத்தும் அமைப்புகள் மீது தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

இப்படிக்கு

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு

National Christian Council
NEWS

NCC Jebasingh

அனுப்புநர்

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு.
Ph.814406 9997

பெறுநர்.

மாண்புமிகு தலைவர் அவர்கள்
மாநில சிறுபான்மை ஆணையம்
சென்னை.

பொருள்:

மதுரை புறநகர் மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியம் ஸ்ரீசதுரகிரி மகாலிங்கம் மலை அடிவாரத்தில் உள்ள ஜெப வீட்டை அகற்ற கோரிய புகார் மனு தள்ளுபடி செய்வது சம்பந்தமாக.

வணக்கம் ஐயா.

ஸ்ரீ சதுரகிரி மகாலிங்கம் மலை அடிவாரத்தில் அணைக்கரப்பட்டி திரு.பிரபாகரகன் த/பெ.தங்க அழகு கடந்த 25 வருடங்களாக லீபனோன் ஜெபவீடு நடத்தி வருகிறார். அங்குள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து அனைத்து மத விழாக்களிலும் சகோதர/சகோதிரிகளாக பாவித்து விழாக்களை மத நல்லிணக்கத்தோடு கொண்டாடி வருகின்றனர்.

ஸ்ரீசதுரகிரி மகாலிங்கம் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் விழாக்கலுக்கு வரும் பக்தர்கள் அருகில் உள்ள ஜெப வீட்டில் தங்கி தான் கோயிலுக்கு சென்று வருவர்.

இப்படி ஒற்றுமையாக உள்ள கிராமத்தில் மத கலவரத்தை தூண்டும் விதமாக இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் M. சோலைக் கண்ணன் என்பவர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜெபவீடு அகற்ற கோரி புகார் மனு அளித்துள்ளார்.மேற்படி மனு சம்பந்தமாக 8.8.20. அன்று சாப்டூர் காவல் நிலையத்தில் ஜெப வீட்டின் உரிமையாளர் திரு.பிரபாகரன் அவர்கள் ஆஜராகி ஜெபவீடு என்னுடைய சொந்த பட்டா இடத்தில் கட்டி உள்ளதாகவும். சதுரகிரி மகாலிங்கம் திருக்கோயிலுக்கு ஆண்டுதோறும் வரும் பக்தர்கள் என்னுடைய ஜெப வீட்டில் தங்கி திருவிழாவை காண்பதற்கு வருடா வருடம் அனைத்து உதவிகளையும் செய்து வந்து கொண்டு இருக்கிறேன் என்றும் மேலும் என்னுடைய அனுபவத்தில் இருந்த காலி நிலத்தை சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் திருக்கோயிலுக்கு தானமாக அளித்துள்ளேன் என்றும் அருகில் உள்ள அனைத்து கிராம மக்களும் இணைந்து சாதி மதம் பார்க்காது அனைத்து இன்ப | துன்ப நிகழ்வுகளில் ஒற்றுமையுடன் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறோம் என்பது மதுரை மாவட்ட மக்களுக்கு தெரியும் என்றும் தனது வாக்குமூலத்தை சாப்டூர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜெய பிரியா அவர்களிடம் . தெரிவித்து உள்ளனர்.

மேலும் ஜெபவீடால் எந்த ஒரு இடையூறும் இல்லை என்றும் அனைத்து மக்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் கிராம மக்கள் மத நல்லிணக்கத்துடன் செயல்படுகிறோம் என வண்டப்புலி ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஜெயராமன், 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் திரு.அழகுத் தாய் முனியாண்டி, வண்டாரி ஊராட்சி மன்ற தலைவர் திரு.நம்பியார், வண்டாரி முஸ்லிம் ஜமாத் தலைவர் முத்தவல்லி அப்துல் ஆகியோர் எழுத்து பூர்வமாக கடிதம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் எந்த ஒரு மதக்கலவரம் ஏற்படாமல் நல்லாட்சி நடத்தி வரும் அரசிற்கு சிறுபான்மை மக்களிடையே கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும், மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பொய் புகார் அளித்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் கிராம மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட பொய் புகாரை ரத்து செய்து பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமலும் அனைத்து மத மக்களும் ஜெபவீட்டை தொடர்ந்து பயன்படுத்தவும் தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து உரிய ஆவண செய்யும்படி தங்கள் சமூகம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு

ஆண்டவரின் பணியில்

NCC ஜெபசிங்

Jeba Singh / National Christian Council
NEWS

NCC JEBA SINGH

ஆன்லைன் கல்வித் திட்டத்தை தடை செய்ய தேசிய குழந்தைகள் நல ஆணையத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கினணப்பாளர் NCC ஜெபசிங் புகார் மனு .

ஏழை எளிய நடுத்தர குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர்களால் ஆன்ட்ராய்டு செல்போன், மற்றும் மடிக்கணினி வாங்க முடியாத சூழலில் அவர்கள் எப்படி ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும்,,?

ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளுக்கு கண், காதுகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்

, மேலும் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் இடையிடையே ஆபாச வலைதளங்கள் வந்து குழந்தைகளின் கவனத்தை சிதறடிக்கப்படுவது . மிகவும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும் .

மாற்று திறனாளி குழந்தைகளுக்கு எவ்வாறு கல்வி வழங்க பட வேண்டும் என்பது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை .

எனவே ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் நல ஆணையத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கினணப்பாளர் NCC ஜெபசிங் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்

NCC JEBA SINGH
Tamil Christian media

மேய்ப்பன் யார்??

கிறிஸ்து பிறப்பதற்கு முன் 8 ஆம் நூற்றாண்டில் (கி.மு.800 – 700) யூதாவில் பிறந்து வடக்கு தேசமாகிய இஸ்ரவேல் தேசத்திற்கு தீர்க்க தரிசனம் உறைத்தவர் தான் இந்த ஆமோஸ் என்னும் தீர்க்கதரிசி. “ஆமோஸ்” என்றால் “சுமை சுமப்பவர்” என்று பொருள்படும். இறைவாக்கு உரைக்கும்படி கடவுளிடமிருந்து அழைப்பு பெறுவதற்கு முன்னர், ஆமோஸ் ஆட்டு மந்தைக்கு உரிமையாளராகவும், காட்டு அத்திமரத் தோட்டம் பயிரிடுபவராகவும்இருந்தார். “நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்” (ஆமோஸ் 7:14) என்று அவரே தம்மை அடையாளம் காட்டுகிறார். 

எப்படி ஆடுமேய்த்த தாவீதை கர்த்தர் அரசனாக்கினாரோ அதே போல தான் ஆடுமேய்த்த ஆமோசையும் கர்த்தர் தீர்க்கதரிசியாய் மாற்றினார். இவர் மேய்ப்பனின் குணாதிசயத்தை அழக்காக ஆமோஸ் 3:12 -ல் கூறி இருக்கின்றார். “ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல” என்று. இந்த வசனத்தின் பொருள் என்னவென்றால் மேய்ப்பனானவன் எந்த சூழ்நிலையிலும் கொடிய விலங்கிடம் அகப்பட்ட ஆட்டை காப்பாற்ற வேண்டும். தாவீது கூட சிங்கத்திடமிருந்தும் கரடியிடமிருந்தும் மந்தையை காத்துள்ளதை 1 சாமுவேல் 17-34,35 – ல் வாசிகின்றோம். தாவீது தனது ஜீவனையும் பொருட்படுத்தாமல் மந்தையை காப்பாற்றின காரணத்தினால் தான் தேவன் தாவீதை ராஜாவாக உயர்த்தினார். 

சிங்கம் பிடித்து விட்டதே. இனி அந்த ஆடு பிழைக்காது என்று விட்டுவிட்டு செல்லாமல் முடிந்த அளவு போராடி கால்களையாவது அல்லது காதின் துண்டுகளையாவது காப்பற்ற வேண்டுமென்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. அப்படிப்பட்டவர்கள் தான் உண்மையான மேய்ப்பர்கள். ஓவ்வொரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவனுக்கும் ஒரு மந்தையை தேவன் கொடுத்துள்ளார். அதாவது ஒரு கூட்ட ஜனங்களை பரலோகத்திற்கு நேராய் நடத்தும் படியாக நம்மிடம் கொடுத்துள்ளார். அந்த மக்கள் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு பாவத்தில் விழுகையில் அவர்கள் அவ்வளவுதான் என்று அவர்களை வஞ்சித்த பிசாசின் கைகளில் முற்றிலும் விட்டு விடாமல், மேய்ப்பர்களாகிய நாம்தான் பிசானவனோடு போராடி அவர்களை மீட்க வேண்டும். 

யோவான் 10 அதிகாரம் 14.-15 -ல் இயேசு சொல்கிறார், நானே நல்ல மேய்ப்பன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்” என்று. இயேசுவின் சிலுவையில் ஜீவன் தந்து நாம்மை காப்பாற்றியதால் தான் இன்றைக்கு நாம் விடுதலையுடன் வாழ்கின்றோம். அந்த இயேசு நம்மிடம் கொடுத்துள்ள சிறு மந்தையை கவனமோடு பாதுகாக்கும் பொறுப்பை நம் கையில் கொடுத்துள்ளார். ஆதலால் விழிப்போடு இருந்து மந்தையை காப்போம். பரலோகம் சேர்ப்போம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

Tamil Christian media

மனமகிழ்ச்சி தரும் சாந்தகுணம் 

Admin : BJR CHRISTIAN MEDIA

சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். சங்கீதம் 37:11.

அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்
குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன. இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான். வேட்டைக்காரன் அதை சட்டை செய்யாமல், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான். இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். 

முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு. விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும். ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்துவீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?” பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான். 

“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?” “நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்” அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார். வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான். தனது வீட்டில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தான். குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள். தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் பிணைத்தான். தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை பரிசளித்தான் வேட்டைக்காரன். ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர். 


மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான். பிரச்சனை தான் வேறு வேறு. நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக்கொள்ளக்கூடாது. ஆடுகள் முக்கியம் தான். ஆனால் அதைவிட மனஅமைதி முக்கியமல்லவா?. “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்ளூ அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத்தேயு 11:29) என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஏனெனில் அவர் சாந்தக்குணமுள்ளவராக இருந்தார். அவரிடத்திலிருந்து இந்த சாந்தத்தையும், மனத்தாழ்மையையும் நாம் கற்றுக் கொண்டால், இந்த உலகத்தில், வீடுகளில், சபைகளில், சமுதாயங்களில், வேலை இடங்களில், போராட்டங்கள் இருக்காது, மாறாக, அமைதியும், இளைப்பாறுதலும் உண்டாகும். ஆமென் அல்லேலூயா

please like our Facebook page

Follow this link to join my WhatsApp group