NEWS

NCC request to kanyakumari collector

கரோனா நோய் தொற்று நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்கவும், போதிய இடவசதியை ஏற்படுத்தி கொடுக்கவும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் கோரிக்கை. மனு .

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று மிகவும் விரைவாக பரவி வருகிறது.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது .

கரோனா தொற்று உள்ளவர்களுக்கு அரசு அறிவுறுத்தலின் படி சரியான நேரத்தில் உணவு வழங்கப்பட வேண்டும். ஆனால் கரோனா தொற்று சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்கபடவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. .

மருத்துவ நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் உணவு வழங்குவதற்கு எடுக்கவில்லை

. மேலும் அதிகமான நோயாளிகள் இருப்பதால் இட வசதியும் குறைவாகவே உள்ளது .

தினமும் காலை 10.30 மணிக்கு தான் காலை உணவு வழங்கபடுவதாகவும் மதிய உணவு 4 மணி வரை வழங்கப்படாததாலும் கரோனா நோயாளிகள் சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தி உள்ளனர்.

பல்வேறு வயதில் சிறுவர் முதல் முதியோர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர் . பலருக்கு சர்க்கரை நோயும் பலவிதமான உடல் உபாதைகள் உள்ளவர்கள் அனுமதிக்கப்ட்டுள்ளனர்

ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தலையிட்டு போர்க்கால நடவடடிக்கை எடுத்து சரியான நேரத்தில் உணவு வழங்கிடவும் , போதிய இடவசதியை ஏற்படுத்தி கொடுக்கவும் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

Leave a comment