NEWS

NCC Jeba singh Request

மலக்குழியில் இறங்கி உயிர்ப் பலியாகும் இளைஞர்களுக்கு கல்வியும், தொழிற்பயிற்சியும், வழங்க நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கினணப்பாளர் NCC ஜெபசிங் வலியுறுத்தல் .

மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் உயிர் இழப்பால் அவர்களது குடும்பம் மிகவும் வறுமையால் பாதிக்கப்படுகிறது .

தூத்துக்குடி மாவட்டம் செக்கார குடியில் தனியார் வீட்டு உரிமையாளர் அழைப்பின் பேரில் 2.7.20 அன்று செப்டிக் டேங்க் கழிவுநீர் அகற்றும் போது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகவும் வறுத்ததிற்குரியது.

மலம் கையால் அள்ள தடைவிதித்து சட்டம் உள்ள போதிலும் மலக்குழியில் இறங்க வைத்து வேலை செய்ய வைத்த வீட்டு உரிமையாளர் மீது சட்ட படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறந்து போன இளைஞர்கள் நான்கு பேருக்கும் தமிழக அரசு தலா 25 லட்சமும் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

மலக்குழியில் இறங்கி விஷ வாயு தாக்கி இறப்பது தமிழகத்தில் தொடர்கதையாகி உள்ளது. . தமிழக அரசு இத் தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு தனியாக அவர்களுக்கு என்று தொழிற்கல்வியைப் தொடங்கி பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு வழங்க நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

National Christian Council

Leave a comment