Tamil Christian media

NCC Jebasingh

காட்மேன் இணையவழி கதைத் தொடர் வெளியிட்டை உறுதி செய்க!

தமிழக அரசுக்கு நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் கோரிக்கை .

மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

2020 ஜீன் 12ந் தேதி ஜீ 5 செயலியில் வெளியாகவிருந்த இத்தொடரின் முன்னோட்ட காட்சி மே 26ந் தேதி யூட்யூப்பிலும் ஜீ 5 நிறுவனத்தின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளங்களிலும் வெளியானது .

ஒரு நிமிட முன்னோட்ட காட்சியில் சில வசனங்கள் தங்கள் சாதியை அவமதிப்பதாகவும் ஆகவே இத்தொடரை தடை செய்ய வேண்டும்மெனவும் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தை சேர்ந்த சிலர் தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்திருக்கிறார்கள்.

380 நிமிடங்கள் கொண்ட இத்தொடரில் ஒரு நிமிட முன்னோட்ட காட்சியை மட்டும் பார்த்து விட்டு இது தங்களுக்கு எதிரானது என்கிற முடிவுக்கு வருவது வருத்தத்திற்குரியது .

இத்தொடரின் தயாரிப்பாளர் ஒரு கிறிஸ்தவக் கைக்கூலி என்றும் பெரும் மதக் கலவரத்தை தூண்டிவிடும் சதியின் ஒரு பகுதியாகவே இத் தொடர் தயாரிக்க பட்டுள்ளதாகவும் வதந்தி பரப்பபடுகிறது.

காட்சி ஊடகத்துறைக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுத்து அதற்கான பாதுகாப்பை அரசியல் சாசனத்தின் பேரால் தமிழக அரசு வழங்கி காட்மேன் தொடரை திட்டமிட்ட வகையில் ஜீ 5 திரையிட அதற்கான பாதுகாப்பை தமிழக அரசு வழங்கிட நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

NCC ஜெபசிங் .
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு

NCC ஜெபசிங் .
மாநிலஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு

Leave a comment