Tamil Christian media

National Christian Council

தையல் கலைஞர்களுக்கும் , அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளிச் சீருடை தைக்கும் தையல் கூட்டுறவு பெண்களுக்கும் கரோனா வைரஸ் கால நிவாரணமாக ரூபாய் 5000 வழங்கிட வேண்டும் என்று நேஷ்னல் கிறிஸ்டின் கவுன்சில் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெபசிங் அவர்கள் முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அனுப்புநர்


NCC ஜெபசிங் மாநில ஒருங்கிணைப்பாளர் . நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு Ph. 8144069997 .

பெறுநர்


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமை செயலகம், சென்னை .9

பொருள்: தமிழகத்தில் உள்ள தையல் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மனு .

வணக்கம். ஐயா!

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோயில் இருந்து பாதுகாத்திட தாங்கள் எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியதாகும் .

கரோனாவில் இருந்து பாதுகாத்திட அனைத்து தரப்பினரும் வீடுகளிலேயே தனிமை படுத்தி கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது .

இதனை ஏற்று ஏழை எளிய மக்கள் வீடுகளிலேயே உள்ளனர்.

தமிழ்நாட்டில் தையல் தொழிலில் ஈடுபடுவர்கள் பெரும் பகுதி பெண்கள் ஆவர்.

அதிலும் கணவனால் கைவிடபட்டோர் , விதவைகள் , ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தான் தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமானம் / ஆட்டோ/ சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக அரசு 1000 ரூபாய் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது .

மேலும் வாரியத்தில் பதிவு செய்யப்படாத முடி திருத்துவோருக்கு ரூபாய் 2000 தாங்கள் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது .

எனவே வாரியத்தில் பதிவு செய்யாத தையல் கலைஞர்களுக்கும் , அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளிச் சிருடை தைக்கும் தையல் கூட்டுறவு பெண்களுக்கும் கரோனா வைரஸ் கால நிவாரணமாக ரூபாய் 5000 வழங்கிட தாங்கள் நடவடிக்கை எடுக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் .

JABA SINGH / NATIONAL CHRISTIAN COUNCIL

இப்படிக்கு.
NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிைணப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு .

இவ்வாறு நேஷ்னல் கிறிஸ்டின் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெபசிங் அவர்கள் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியிருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Leave a comment