Tamil Christian media

19 sailors killed in a missile attack

Thanks to news 7

In the Gulf of Oman, 19 warriors were killed when an Iranian missile fired a missile into another missile.

The Strait of Hormuz in the Gulf of Oman is considered one of the most important waterways in the world. One-fifth of the world’s crude oil is shipped there. Meanwhile, Iranian warships were engaged in training yesterday in the Bandar e Jask near the Strait of Hormuz. At that time a ship was involved in missile testing. The missile was targeted beneath the water. 

Another Iranian warship, Konarak, was standing in the area at the time. This was followed by a missile launched from a ship to a specific target. However, the missile struck the Konarak ship that was standing nearby due to insufficient space between the target and the target. The accident killed 19 soldiers on the spot. Another 15 people have been hospitalized. 

According to Iranian media reports that the ship’s crew, which was damaged by the attack, is sinking into the water and that the ship’s crew is unaware of it. It was manufactured in the Netherlands and purchased by Iran before the Islamic Revolution of 1979.accident

Tamil தமிழ்

கப்பல் மீது தவறுதாலாக நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழப்பு

நன்றி நியூஸ்7

ஒமன் வளைகுடாவில், ஈரான் போர்க்கப்பல்கள் ஏவுகணை சோதனை நடத்தியபோது, ஏவுகணை தவறுதலாக மற்றொரு கப்பல் மீது தாக்கியதில் 19 வீரர்கள் உயிரிழந்தனர்.

உலகின் மிக முக்கிய நீர்வழிப்பாதைகளில் ஒன்றாக ஓமன் வளைகுடாவில் உள்ள ஹார்மஸ் ஜலசந்தி கருதப்படுகிறது. இதன் வழியாக உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் கப்பல் மூலம் இவ்வழியாகவே எடுத்துச் செல்லப்படுகிறது. இதனிடையே ஹார்மஸ் ஜலசந்தி அருகே உள்ள பந்தர் இ ஜஸ்க் பகுதியில் நேற்று ஈரான் போர் கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அப்போது அதில் ஒரு கப்பல் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது. அந்த ஏவுகணை தண்ணீருக்கு அடியில் இலக்கு வைக்கப்பட்டிருந்தது. 

அப்போது கொனாரக் என்ற மற்றொரு ஈரான் போர் கப்பலும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தது. இதனை அடுத்து முதல் ஒரு கப்பலில் இருந்து குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டது. ஆனால் ஏவுகணை இருந்த இடத்திற்கும், இலக்கிற்கும் இடையே போதுமான இடைவெளி இல்லாததால் அருகில் நின்று கொண்டிருந்த கொனாரக் கப்பலை ஏவுகணை தாக்கியது. இந்த விபத்தில் 19 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த தாக்குதலில் பலத்த சேதமடைந்த கொனாரக் கப்பல் நீரில் மூழ்கி வருவதாகவும் அதில் இருந்த கப்பல் ஊழியர்களின் நிலை தெரியவில்லை என ஈரான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன, கொனாரக் கப்பல் 47 மீட்டர் நீளமும் 154 அடியும் உடைய ஆயுத தளவாடங்களை ஏந்திச்செல்லும் கப்பலாகும். இது நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்டு 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்கு முன்னர் ஈரானால் வாங்கப்பட்டது..

Leave a comment