Tamil Christian media

TN Wineshop

தமிழக அரசு ஆணை:

தமிழக அரசு நாளை முதல் {7/05/2020} மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்திருந்தது. இதற்கு பல தரப்பட்ட மக்களும் இயக்கங்களும் எதிர்ப்புகளை தெருவித்து வருகின்றனர்.

நேஷ்னல் கிறிஸ்டின் கவுன்சில்:

இந்த நிலையில் நேஷ்னல் கிறிஸ்டின் அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் சகோ ஜெபசிங் அவர்கள் தமிழக முதலமைச்சருக்குக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்.

மனுவின் நகல்.

அதில் மிகக் கொடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளை மூட குறிப்பிட்டிருந்தார். மற்றும் மக்கள் படும் இன்னல்களையும், மதுவினால் ஏற்படும் பாதிப்புகளையும் விளக்கியிருந்தார்.

மக்களின் கருத்து:

கடந்த 30 நாட்களுக்கு மேலாக மதுபானக்கடைகள் அடைக்கப் பட்டிருந்த காரணத்தால், பல மக்கள் போதை பழக்கங்கள் மற்றும் குடிப்பழக்கத்திலிருந்து முழுமையாக விடு பெற்று குடும்பத்தினருடன் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். மட்டு மல்லாமல் குடிபோதையால் நிகழும் வன்முறைகள், கொலைகள் தற்போது வெகுவாக குறைந்துள்ளது என்று சொல்வதை விட முழுவதுமாக இல்லை என்பதே உண்மை.

ஆகவே, மக்களின் அரசாக இருக்கும் பட்சத்தில் மக்களின் நலனுக்காகவும் ஏழைக்குடும்பங்களை மீட்டெடுக்கும் முயர்ச்சிக்காகவும் தயவு கூர்ந்து பூரண மது விலக்கை அமல் படுத்தினால். பல குடும்பங்கள் மிக மகிழ்ச்சியாக வாழும் என்பதில் எந்த வித ஐயமுமில்லை.

Leave a comment