NEWS

National Christian Council

தமிழக முதல்வருக்கு நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் கோரிக்கை மனு .

சாத்தான்குளம் இரு வணிகர்கள் படுகொலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ரிமாண்டை ஏற்றுக் கொண்ட குற்றவியல் நடுவரும் குற்றவாளியே! .

ரிமாண்ட் ஏற்கும் போது கைது செய்யப்பட்டவரின் உடலில் உள்ள காயங்களை குற்றவியல் நடுவர் கண்காணித்து இருக்க வேண்டும். நீதிமன்ற காவலில் அடைக்கும் முன் கொலைகாரர்கள் தாக்கல் செய்யும் கைது அறிக்கையை சரிபார்த்து இருக்க வேண்டும்.

7 வருடத்திற்கு உட்பட்ட தண்டனைக்குரிய குற்றங்களில் யாரையும் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அதனையும் மீறி கைது செய்தே தீர வேண்டும் என்றால் அதற்கான காரணத்தை காவல்துறையினர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

அறிக்கை நியாயமானதாக இருக்கும் பட்சத்திலேயே குற்றவியல் நடுவர் ரிமாண்டை ஏற்க வேண்டும் .

ஆனால் இந்த விதிமுறைகள் எதையும் குற்றவியல் நடுவர் செய்யாமல் ரிமாண்டை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலமாக சட்டத்தை குழி தோண்டி புதைத்து கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளார்.

அப்பாவி பொதுமக்களை கொலை செய்வதை காவல்துறை வாடிக்கையாக வைத்துள்ளது.

சட்டத்தின்படி செயல்பட வேண்டிய நீதித்துறையோ, காவல்துறைக்கு உடந்தையாக உள்ளது.

நீதித்துறை நடுவர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டியவர் .

குற்றவியல் நடுவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக தமிழக முதல்வரை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் .

Leave a comment